தப்பிக்கும் முயற்சியில் கால் உடைந்த சோகம்! பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
காவல் துறையின் சோதனையிலிருந்தள தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். சுங்கை பெட்டாணியில் உள்ள கடைவீதியின் மேல் தளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகப் புகார் கிடைத்த நிலையில் நண்பகல் 2.30 மணியளவில் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் சோதனையை மேற்கொள்ளும் போது அப்பெண் தப்பிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்த 3 Bangladesh ஆடவர்கள் கைது செய்துள்ளதாகவும் தப்பிக்க முயன்று காலை உடைத்துக் கொண்ட பெண் 30 வயது தாய்லாந்து நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் Sultan Abdul Halim மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita warga Thailand patah kaki selepas terjun dari tingkat atas rumah kedai ketika cuba melarikan diri semasa serbuan premis pelacuran di Taman Sejati Indah. Polis menahan enam individu dan merampas barangan berkaitan. Siasatan masih diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *