பி.கே.ஆர் மகளிரின் அன்பு யாத்திரை! பெண்களின் அவசியம் உணர்வோம்!
- Thinagaren Sanggaren
- 31 Jan, 2026
ஜனவரி 31,
மகளிர் நலனுக்காகக் கோலா லங்காட் பி.கே.ஆரின் மகளிர் பிரிவினர் பெண்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான நலத்திட்டங்களையும் வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டங்களையும் பகிர்ந்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அன்பு யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். கோலா லங்காட் பகுதிகளில் வாழும் மகளிர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடலை நடத்துவதன் மூலமாக அவர்களின் அன்றாட வாழ்வியலை மேலும் நெருக்கமாக உணர முடிகிறது என கோலா லங்காட் மாவட்டப் பி.கே.ஆர் மகளிர் தலைவியும் பி.கே.ஆர் தேசிய மகளிர் குழு உறுப்பினருமான UMANANTHINI GNANAPRAGASAM தெரிவித்தார்.
தனித்து வாழும் தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் என அனைத்து மகளிர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலமாக அவர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான மடானி உதவித் திட்டங்களையும் செயல்படுத்த இலகுவாக இருப்பதாக UMANANTHINI தெரிவித்தார். இத்திட்டத்தைக் கோலா லங்காட்டில் தற்போது தொடங்கியிருப்பதாகவும் கோலா லங்காட் மாவட்டம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாகவும் UMANANTHINI தெரிவித்தார். மகளிர்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்வுகள் அவசியம் என்ற போதிலும் அவர்களின் அன்றாட வாழ்வியலை மேம்படுத்தும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என UMANANTHINI வலியுறுத்தினார்.
இந்த அன்பு யாத்திரையில் மூலமாக ஒவ்வொரு மகளிரும் தனியாக இல்லை, அவர்களுக்கென நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை நாம் ஆழமாக விதைக்கவிருப்பதாக UMANANTHINI தெரிவித்தார். பெண்களின் நலனுக்காகப் பி.கே.ஆர் மகளிர் பிரிவு விரிவானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் மடானி அரசாங்கத்தில் மகளிர் சம்மந்தப்பட்ட நலத்திட்டங்களை இந்த அன்பு யாத்திரையின் மூலமாக அவர்களுக்குப் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்க முடியும் என தாம் நம்புவதாகக் கோலா லங்காட் மாவட்டப் பி.கே.ஆர் மகளிர் தலைவியும் பி.கே.ஆர் தேசிய மகளிர் குழு உறுப்பினருமான UMANANTHINI GNANAPRAGASAM தெரிவித்தார்.
#wanitareformasimemimpinmadani #SukmaWAJA #sheconect #WanitaKeadilan #WanitaKeadilanKualaLangat #MPWP #MADANIBekerja #KitaSelangorMajuBersama
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



