பினாங்கில் பள்ளி மாணவர்கள் மத்தியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு!
- Muthu Kumar
- 21 Jul, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு. ஜூலை 21-
பினாங்கு மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து, அதற்கான அடிப்படை ஞானம் மறுசுழற்சி விழிப்புணர்வு வாயிலாகத் தொடங்கும் சூட்சுமத்தையும் போதிக்கும் வழிகாட்டல் திட்டத்தை இங்கிருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்துவதென்று, மாநில மாநகர் மன்றம் தலையாய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அவ்வண்ணம் பினாங்கு மாநிலக் கல்வி நிறுவனங்களின் தொழில் முனைவோர் சங்கத்துடன் இணைந்து பள்ளி ரீதியாக இப்படிப்பினை நிகழ்த்துவதற்கு, மாநகர் மன்றம் நல்லிணக்கம் கண்டு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டியிருக்கும் நிலையில், அண்மையில் இங்கிருக்கும் ஜாலான் ஆயர் ஈத்தாம் சாலையிலுள்ள காங் மின் சீனப் பள்ளியில் இது தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சீனப் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட வேளையில், அப்பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் வட்டாரத்திலுள்ள வைஸ் ஜூனியஸ் பாலர் பள்ளி, லிட்டில் திரிடோப்ஸ் பாலர் பள்ளி, ஜூனியர் ஸ்கோலர்ஸ் பாலர் பள்ளி, பிரைட் பிகினிங் பாலர் பள்ளி, அரேனா ரியா பாலர் பள்ளி, குளோரியஸ் கிட்ஸ் பாலர் பள்ளி, கிங்டம் - பார்லிம் பாலர் பள்ளி, திரிவிஸ் பாலர் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 260 சிறார்களை ஒருங்கிணைத்து, இத்திட்டத்தில் பங்கேற்கத்தக்க வருகையளித்திருந்த ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு ஜோசப் இங் சூன் சியாங், மழலையர்களை மறுசுழற்சி நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த விவேகத் திட்டம் வரவேற்கத் திட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியின் பேரில் தக்க, பாராட்டுதலுக்குரியது என்றும், இஃது, பெரியோரையும் சிந்திக்க வைத்து, அவர்களையும் நல்வழிப்படுத்தும் நன்மைக்கு வித்திடும் நல்லதொரு வாய்ப்பு என்று புகழாரம் சூட்டினார்.
மாநகர் மன்றத்தின் பொதுச்சேவைத் துறை இயக்குநர் ரஷீதா ஜலாலுதீன் இதன் பிரதான ஏற்பாட்டாளராக செயல்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு மறுசுழற்சி திட்டத்தின் மன்ற விரிவுரையாளர் சேவியர் செபஸ்தியான் சிறப்பு வருகை மேற்கொண்டு மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் எடுத்துரைத்து, இத்திட்டம் மீதான மாணவர்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஊக்குவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



