சிலாங்கூரில் 94 வெளிநாட்டினர்கள் கைது! - குடிநுழைவுத் துறை அதிரடி!
- Thinagaren Sanggaren
- 21 Aug, 2025
ஆகஸ்ட் 21,
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் எந்தவோர் ஆவணங்களுமில்லாது வேலை செய்து வந்ததாகவும் 94 வெளிநாட்டினர்களைத் தேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. நேற்று நண்பகல் 1.40 மணிக்குச் சிலாங்கூர் காஜாங்கில் உள்ள தொழில்சாலைகளில் குடிநுழைவுத் துறை திடீர் சோதனையை மேற்கொண்டதில் 94 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
மொத்தம்
123 பேரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மியன்மார், இந்தோனேசியா, வங்காள தேசத்தைச் சேர்ந்த 94 வெளிநாட்டினர்கள் முறையான ஆவணங்களில்லாமல் தங்கியிருந்தது
கண்டறியப்பட்டதாகவும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். கைது
செய்யப்பட்டவர்கள் 23 முதல் 46 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் சட்டவிரோதமாக மலேசியாவில்
தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 94 வெளிநாட்டிநர்களும் மேலதிக
விசாரணைக்காகக் குடிநுழைவுத் துறையின் பாதுகாப்பு ஆணையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக
Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



