கலவரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் கைது! - Brickfields காவல்துறை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 16,

தலைநகரின் கட்டுமானத்தலத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபடும்படியான காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாக 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Firdaus Mustafa தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை 4.53 மணிக்குப் பங்சாரில் உள்ள ஒரு கட்டுமானத்தில் நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Firdaus Mustafa தெரிவித்தார்.

நேற்றிரவு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொதுமக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாகவும் இரவு பங்சாரில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் சம்மந்தப்பட்ட 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 37 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Firdaus Mustafa தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Firdaus Mustafa தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *