தலைநகரில் 770 வெளிநாட்டினர்கள் கைது! – புக்கிட் பிந்தாங்

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 3, 

தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் தேசிய குடிநுழைவுத் துறையின் மேற்கொண்ட சோதனையில் 770 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 106 குடிநுழைவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கையில் 1,600 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தியதாகவும் முறையான ஆவணங்களில்லாமலிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 770 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 377 பேர் BANGLADESH நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 235 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்றும், 58 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், 72 பேர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 9 சிறுவர்களுடன் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்தது மட்டுமின்றி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கை 26 மணிநேரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *