சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 32 வெளிநாட்டினர் கைது!
- Thinagaren Sanggaren
- 21 Jul, 2025
ஜூலை 21,
முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த 32 வெளிநாட்டினர்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கைது செய்தது. இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் Sungai Pulai கடல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய படகைச் சோதனையிட்டதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அடுத்த 30 நிமிடங்களில் மற்றொரு படகில் 6 பேர் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் சோதனை நடவடிக்கைக் கேப்டன் Rusley Chi Ari தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 32 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்
என்றும் 30 ஆண்கள் 2 பெண்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து
கடல் வழியாகச் சிலாங்கூர் கடல் பகுதியை நோக்கிப் பயணிக்கும் போது சுமார் 2 மைல் தொலைவில்
அவர்கள் கைது செய்யப்பட்டதாக Rusley Chi Ari தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் போது படகிலிருந் உபகரணங்களும் பொருள்களும்
பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு RM200,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும்
கைது செய்யப்பட்ட 32 வெளிநாட்டினர்களையும் மேலதிக விசாரணைக்காகச் சபாக் பெர்ணாம் காவல்
நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சோதனை நடவடிக்கைக் கேப்டன் Rusley Chi Ari தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



