போலியான வழக்கில் RM1,448,000 இழந்த மூதாட்டி!

top-news

ஏப்ரல் 15,

மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மோசடி பணமான RM1,448,000 பணத்தைச் செலுத்தும்படி அரசு அதிகாரிகள் போன்று போலியாக நபர் கூறியதை நம்பி 68 வயது பெண் குத்தகையாளர் RM1,448,000 இழந்துள்ளதாக Padang Besar மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri தெரிவித்தார். 

தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் அதிகாரி என ஒரு பெண் கடந்த மார்ச் 12 ஆம் திகதி காலை 8 மணிக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாலையில் காவல் அதிகாரி என கூறிய நபர் தம்மைக் கைது செய்யவிருப்பதாகவும் மிரட்டியதால் பயத்தில் 10 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைச் செலுத்தியதாகப் பாதிகப்பட்ட 68 வயது பெண் குத்தகையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   சம்மந்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் காவல்துறையினர் முடக்கியிருக்கும் நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருவதாக Padang Besar மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri தெரிவித்தார்.

Seorang wanita warga emas berusia 68 tahun kehilangan RM1,448,000 selepas ditipu sindiket menyamar sebagai pegawai kerajaan. Mangsa membuat 10 transaksi kerana diugut akan ditangkap. Polis kini menyiasat dan telah membekukan akaun berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *