தீ விபத்தில் முதியவர் பலி!

top-news

நவம்பர் 7,

கடல் மீது கட்டப்பட்ட வீடுகளில் தீ பிடித்ததில் 60 வயது Mayat Salleh Alih எனும் முதியவர் உடல் கருகி உயிரிழந்ததாக Tawau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Jemishin Ujin தெரிவித்தார்.
காலை 7 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் 16 தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் காலை 8 மணிக்குத் தீயை முழுமையாக அணைத்ததாக அவர் தெரிவித்தார். வீட்டின் உரிமையாளர் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாகத் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட வீட்டை முழுமையாகச் சோதனையிட்டதாக அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் நண்பகல் 2 மணியளவில் வீட்டின் உரிமையாளர் 60 வயது முதியவரைக் காணவில்லை என புகார் அளித்ததும் மீண்டும் சம்மந்தப்பட்ட பகுதியில் தீயணைப்பு மீட்பு ஆணையத்தினர் சோதனைய நடத்தியதில் 60 வயது முதியவர் கடல் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து கடலில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளதாக Tawau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Jemishin Ujin தெரிவித்தார்.

Seorang lelaki warga emas ditemukan rentung dalam kebakaran rumah setinggan di Tawau. Mayatnya ditemukan di dapur belakang rumah setelah operasi pemadaman api selesai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *