இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு ஆள் கடத்தல்! ஐவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 9,

 இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவருடன் இருந்த இந்தியாவை சேர்ந்த 4 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். நேற்று மாலை GOMBAK சாலையில் சந்தேகத்திற்குரிய வாகனத்தை சோதனையிட்ட  குடிநுழைவு துறையினர் 48 வயது வாகனமோட்டியுடன் இந்தியாவைச் சேர்ந்த 18 முதல் 47 வயதுடைய நால்வரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னமே மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து தலா RM6,000 பெற்றுக் கொண்டு மலேசியாவில் வேலை வாங்கி கொடுப்பதாக நம்பிக்கை அளித்து, சட்டவிரோதமாக அவர்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்த குற்றத்திற்காக 48 வயது உள்ளூர் ஆடவரைக் குடிநுழைவு துறையினர் கைது செய்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *