நான் தான் விளாத்திகுளம் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்!

top-news
FREE WEBSITE AD

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தர்ம முனிஸ்வரக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து வருகிற ஏப்ரல் 2ம் தேதி மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் காவல்துறையினர் தர்ம முனீஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த காட்டுப் பகுதிக்கு அவனை அழைத்து சென்று எவ்வாறு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாய் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முகத்தை மூடியபடி உடல் பரிசோதனைக்காக காவல்துறையினர் கொண்டு வந்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை முடிந்த பின்பு காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை நீதிபதி பிரித்தா முன்பு ஆஜர் படுத்தி உள்ளனர்.இதைத்தொடர்ந்து நீதிபதி ப்ரீத்தா குற்றவாளி தர்ம முனீஸ்வரனிடம் குற்றச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

இதில் குற்றவாளி தர்ம முனிஸ்வரன் தான் குற்றத்தை செய்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிரித்தார் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தார். வருகிற ஏப்ரல் 2ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து குற்றவாளி தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *