அன்வாரின் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது! வழக்கு தொடுக்கும் வேதமூர்த்தி!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 13,

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்பதால் நீதிமன்ற வழக்கு தொடுக்கவிருப்பதாக முன்னாள் அமைச்சரும் MAP கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார். சிறை தண்டனை பெற்ற ஒருவர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்தை அன்வார் மீறியிருப்பதாக வேதமூர்த்தி குற்றம்சாட்டினார். 2018 அரசு மன்னிப்பைப் பெற்றது அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது செல்லாது என்றும் அதன்பின்னர் 2022 தம்பூன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரானதும் கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அன்வாரின் பிரதமர் பதவியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வேதமூர்த்தி தெரிவித்தார்.

2018 மே 16 மாட்சிமை தங்கிய மாமன்னர் அன்வாருக்குப் பொது மன்னிப்பை மட்டுமே வழங்கினார். அன்வார் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை விலக்கு குறித்தும் எந்தவொரு குறிப்பும் இல்லை என வேதமூர்த்தி தெரிவித்தார். அன்வாரின் விடுதலை மாமன்னரின் பொதுமன்னிப்பைச் சார்ந்தது. ஆனால் சிறை தண்டனை பெற்றவர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கி சட்டத்தை அன்வார் மீறியிருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

2022 அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்ற காலத்தில் தடை அமலில் இருந்ததை அன்வார் மறைத்திருப்பதாக வேதமூர்த்தி குற்றம்சாட்டினார். 2022 நவம்பர் 24 பக்காத்தான் பாரிசான் GPS, GRS, வாரிசான் கட்சிகளின் ஆதரவுடன் அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *