பெர்சத்துவின் கைக்கூலியானாரா வேதமூர்த்தி? டி.ஏ.பி எம்.பி கேள்வி!
- Thinagaren Sanggaren
- 13 Aug, 2025
ஆகஸ்ட் 13,
அன்வார் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என வேதமூர்த்தி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கின் பின்னணியில் பெர்சத்து கட்சி இருப்பதாகப் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாரெட்சான் ஜோஹான் தெரிவித்தார். 2018 இல் அன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போது இந்த வேதமூர்த்தி அமைச்சரவையில் இருந்தார். தேர்தலை எதிர்நோக்காத வேதமூர்த்தி மகாதீரின் செனட்டர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சராகப் பதவியிலிருந்தார். 2018 போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தலில் அன்வார் போட்டியிட்ட போது வேதமூர்த்தி இது குறித்து வாயைத் திறக்கவில்லை. ஆனால் இப்போது பெர்சத்து கூட்டாளிகளுடன் சேர்ந்துக் கொண்டு சட்டத்தை மதிப்பதாகப் பாசாங்கு காட்டுகிறார் என வழக்கறிஞருமான சியாரெட்சான் ஜோஹான் சாடினார்.
இதே வேதமூர்த்தி இந்தியர்களுக்கான சிறந்த
பிரதமராக அன்வார் இருப்பார் என்றும் மித்ராவை வழிநடத்தும் பொறுப்புள்ள தலைவர் அன்வார்
என்றும் கூக்குரலிட்டார். இப்போது அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்து
விட்ட பின்னர் இப்போது அன்வாருக்கு எதிராக வழக்கு தொடுப்பது அன்வாரைத் தொந்தரவு செய்யும்
ஒரு செயல் என சியாரெட்சான் ஜோஹான் தெரிவித்தார். வேதமூர்த்தி
சமீபக் காலமாகப் பெர்சத்து தலைவர்களுடன் ஒட்டி உறவாடுகிறார். பெர்சத்துவிற்குத் தனது
விசுவாசத்தைக் காண்பிக்க அன்வாரை எதிர்கிறார். உண்மையில் நாட்டின் சட்டத்தின் மீது
அக்கறையுள்ளவர் அன்வார் சட்டத்தை மீறி
தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் 2018 அவர் அமைச்சராக இருந்த போதே இதை எதிர்த்திருக்க
வேண்டும். வேதமூர்த்தி அப்போது அமைச்சர் எனும் அதிகாரத்தில் இருந்தார். அதிகாரம் அவரைத்
தடுத்ததா? அப்படியுமில்லை
என்றாலும் 2022 நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில் இந்த வேதமூர்த்தி வாயைத் திறக்கவில்லை, வேதமூர்த்தியிடம் உண்மையுமில்லை நியாயமுமில்லை என சியாரெட்சான் ஜோஹான்
கடுமையாகச் சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



