நேரம் வரும்போது அறிவிப்பேன்! - கைரி
- Shan Siva
- 07 Nov, 2025
கோலாலம்பூர், நவம்பர் 7: அம்னோவிற்குத் திரும்புவதற்கு தாம் முறையாக விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுவதை
கைரி ஜமாலுதீன் இன்று மறுத்துவிட்டார். மேலும் நேரம்
வரும்போது மட்டுமே அறிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ரெம்பாவ் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர், கோலாலம்பூர் உலக வர்த்தக
மையத்தில் (WTC) நடந்த பெமுடா அம்னோ நிகழ்வில் கலந்து கொண்ட
பிறகு தெரிவித்தார்.
ஜனவரி 2023 இல்
கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக வெளியேற்றப்பட்ட கைரி கிட்டத்தட்ட இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மதியம் அம்னோ தலைமையகத்தில் வருகை தந்தது
பல்வேறு ஊகங்களைத் தூண்டியது.
சீர்திருத்த
அமைப்பு ஒன்றின் சார்பாக கைரி ஒரு குழு
பேச்சாளராக அழைக்கப்பட்டதாக FMT தெரிவித்துள்ளது.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்
டாக்டர் அக்மல் சலேவின் தலைமையில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, உற்சாகமான பார்வையாளர்களை ஈர்த்தது.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட பின்னர் இன்று அவர் முதன்முறையாக அந்தக்
கட்டிடத்திற்குள் பிரவேசித்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



