பெரோடுவாவின் நம்பர் 1 மார்க்கெட் அதிகாரியாக நான் இருப்பேன்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

ராவாங், நவ 11: மலேசியாவின் நற்பெயரும், வலுவான ராஜதந்திரமும், மின்சார வாகனங்களுக்கான (EV) சர்வதேச சந்தையை நாடு எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள உதவியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

.எந்தவொரு திடீர் வளர்ச்சியினாலும் அல்ல, மாறாக பல்வேறு துறைகளில் நமது அர்ப்பணிப்பு மற்றும் தயார்நிலை காரணமாக மலேசியா கவனத்தை ஈர்க்கும் ஒரு கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் பெரோடுவா சுங்கை சோவில், அதன் 5,500,500வது வாகனமான பெரோடுவா பெஸ்ஸாவை நினைவுகூரும் வகையில் அவர் தனது முக்கிய உரையின் போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

பெரோடுவாவின் நம்பர் ஒன் மார்க்கெட்டிங் அதிகாரியாக தாம் இருப்பேன் என்று அவர் கூறினார்.

உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளும் தனது திறன் பெரும்பாலும் மலேசியாவிற்கு நேரடி நன்மைகளாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

சில வாரங்களுக்குள், பெரோடுவாவின் முதல் மின்சார வாகனத்தை அன்வார் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை RM80,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உள்ளூர் மின்சார வாகன உற்பத்திக்கு மலேசியா ஆதரவளிக்கும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *