தராசு சின்னத்தைப் பயன்படுத்தி சபாவில் தேமு போட்டியிடும்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, ஜூன் 25-

சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தராசு சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

ஆனால் இதர கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அது திறந்த மனதுடனான அணுகுமுறையையே பின்பற்றுவதோடு, அரசியல் கூட்டணியில் அனைத்து கட்சிகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் போக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று, கோத்தா கினாபாலுவில் உள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் மகளிர் நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார். தொகுதி பங்கீடு குறித்து கருத்துரைத்த அவர், இதுவரை அது தொடர்பில் விவாதங்கள் இல்லை என்றும், தேசிய முன்னணிக்குள் போட்டியைத் தவிர்ப்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Barisan Nasional akan bertanding dalam pilihan raya negeri Sabah menggunakan logo dacing. Zahid Hamidi nyatakan kesediaan bekerjasama dengan parti lain secara terbuka dan menegaskan belum ada perbincangan mengenai agihan kerusi setakat ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *