குறைந்த உயர் பொருளாதார துறைக்கான விதிமுறைகளை சி.எ.எ.எம் உருவாக்கும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 18-

போக்குவரத்து துறை முறையாக வளர்ச்சி அடைந்து, முன்னோக்கி செல்லும் வகையில் குறைந்த உயர் பொருளாதார துறைக்கான விதிமுறைகளை மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், சி.எ.எ.எம் உருவாக்கும்.

தற்போது வேகமாக வளர்ந்து வரும் குறைந்த உயர் பொருளாதாரம், பல்வேறு ஒருங்கிணைப்புகளை உள்ளடக்கி இருப்பதுடன், செயல்பட வான்வெளி தேவைப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். “எனவே, இதை இயக்க நீங்கள் ஓர் ஆளில்லா விமானம் பயன்படுத்த வேண்டும்.

அதனை பயன்படுத்தும் போது, அது புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஓர் இடம் இருக்க வேண்டும். அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். எனவே, அதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு தேவை". என்றார் அவர்.பாதுகாப்பு பிரச்சினைகளில் சமரசம் காணாமல், அதிகம் தொழில்துறையில் ஈடுபடுபவர்களை ஈர்க்கவும், துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தவும் கட்டமைப்பு தேவை என்பதை லோக் வலியுறுத்தினார்.

அதேவேளையில், நாட்டில் உள்ள விமானப் போக்குவரத்து துறையின் விதிமுறைகள் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படுவதை உறுதி செய்ய அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.நேற்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற சி.எ.எ.எம்மின் புதிய சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனை கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *