பெரிக்காத்தானில் மஇகா இணைவது பற்றி ‘விக்னேஸ்வரனிடம் நானே நேரடியாக விளக்கம் கேட்பேன்'- ஸாஹிட்!
- Muthu Kumar
- 20 Sep, 2025
கோலாலம்பூர், செப். 20-
தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலில் இணையும் மஇகாவின் சாத்தியம் தொடர்பில், மஇகா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரனுடன் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி விரைவில் கலந்து பேசவிருக்கின்றார்.
மேல் விளக்கங்களைப் விவோ ல்வனுடன் இந்த விவகாரம் குறித்து தாம் பேச விருப்பதாகக் கூறியுள்ள ஸாஹிட், “நானே அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்பேன்" என்று, கோலாலம்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மஇகா பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்து ஒத்துழைக்கக் கூடிய சாத்தியத்தை விக்னேஸ்வரன் கடந்த திங்கள்கிழமை நிராகரிக்கவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு
எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விடுத்திருக்கும் அழைப்பை “ஒட்டுக் கேட்பது போன்றது என்று வருணித்த விக்னேஸ்வரன், இதன் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு, முன்னர் இந்த விவகாரத்தை மஇகா மிக கவனமாகக் கையாளும் என்றார்.
பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய கட்சிகளுடனான மஇகாவின் தொடர்பு, அமனோவுக்கும் ஜசெகவுக்கும் இடையிலான நீண்ட கால' பகைமை போன்றதல்ல என்று விக்னேஸ்வரன் இதற்கு முன்னர் வலியுறுத்திக் கூறியிருந்தார். பெரிக்காத்தான் நேஷனலில் இணைய பல கட்சிகள் ஆர்வம் கொண்டிருப்பதாக, துவான் இப்ராஹிம் இம்மாதம் 12ஆம் தேதி கூறியிருந்தார்.
பெரிக்காத்தானில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்திருக்கும் கட்சிகளின் பட்டியலில், தேசிய முன்னணியின் உறுப்புக்
கட்சிகள் ஏதாவது இடம் பெற்றிருக்கின்றனவா என்று கேட்டபோது, அது குறித்த தகவல்களை வெளியிட துவான் இப்ராஹிம் மறுத்திருந்தார். அத்தகைய விண்ணப்பங்கள்
குறித்து, விரைவில் நடைபெற விருக்கும் பெரிக்காத்தான் நேஷனலின் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று துவான் இப்ராஹிம் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



