தென்சீனக் கடலில் நிலவும் சூழ்நிலையை விவேகத்துடன் நிர்வகிக்க ஆசியான் விருப்பம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11-

தென் சீனக் கடல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, அந்த நீர்வழித்தட நிலைமையை விவேகத்துடன் நிர்வகிக்க வேண்டும் என்று ஆசியான் விரும்புகிறது.

உலகளாவிய அமைதி பலவீனமாகக் காணப்படுவதால் வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில், ஆசியான் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹ்மட் ஹசான் தெரிவித்தார்.

"தென் சீனக் கடலில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கவோ அல்லது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அச்சுறுத்தல்கள் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.." என்றார் அவர்.

58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர் கூட்டம் AMM மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களுடன் இணைந்து சீனாவுடன் ஆசியான் அமைச்சர்கள் மாநாட்டில்,தமது தொடக்க உரையில் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் அவ்வாறு கூறினார்.'

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *