தெளிவான நோக்கம் இருந்தால் அரசாங்கத்தில் சேர்வேன்! - கைரி ஜமாலுடின்
- Shan Siva
- 07 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 7: தெளிவான நோக்கம் இருந்தால் அரசாங்கத்தில் சேருவதற்கான வாய்ப்பை தாம் நிராகரிக்கப் போவதில்லை என்று
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
தனியார் போட்காஸ்ட்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கைரி, தற்போது தனது
அரசியல் வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும், ஆனால் நாட்டிற்கு சேவை செய்யும் எண்ணம் தனது இதயத்திற்கு
நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
உண்மையில் தாம் இப்போது ஜாலியாக இருப்பதாகவும், கடந்த வாரம் டிஜே,
பின்னர் குத்துச்சண்டை என உற்சாகமாகக் கழிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது அம்மா சொன்ன
விஷயங்களில் ஒன்று பொதுச் சேவை எல்லாவற்றிற்கும் மேலானது தேசிய சேவை எனக் கூறியதாக
அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் அன்வார்
ஒரு பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு
அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அரசியலை விட்டு
வெளியேறியதிலிருந்து, கைரி ஊடகம்
மற்றும் வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் போட் காஸ்ட் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்
இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



