16ஆவது பொதுத் தேர்தலில் தேமு தனித்துப் போட்டியிடாது- ஸாஹிட் தீர்க்கம்!

top-news
FREE WEBSITE AD

மஞ்சோங், ஜூலை 7-

எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடாது என்று, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று தீர்க்கமாக அறிவித்தார்.

இதற்காக, பக்காத்தான் ஹராப்பானில் இடம் பெற்றிருக்கும், இதுவரையில் தான் கூட்டணி சேர்ந்திராத கட்சிகள் உட்பட மஇகா, மசீச மற்றும் பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபா (பிபிஆர்எஸ்) உட்பட தனது நீண்ட கால பங்காளிகளை தேசிய முன்னணி தொடர்ந்து மதிப்பீடு செய்யும் என்று. அம்னோ தலைவருமான ஸாஹிட் தெரிவித்தார்.

“தனித்துப் போட்டியிட விரும்புவதாகப் பெருமை பேசாதீர்கள். கடந்த காலத்தில், நாம் தனித்துப் போட்டியிட்டோம். அதன் விளைவால், பேராக்கில் வெறும் ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேசிய அளவில், வெறும் 30 நாடாளுமன்ற இடங்கள் மட்டுமே கிடைத்தன.“ஆதலால், 16ஆவது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட,தேசிய முன்னணியில் உள்ள நமது நண்பர்களுடன் நாம் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது?

"லுமுட்டில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கான வாக்குகளை கணக்கிட்டு அதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து களமிறங்கினால், நியாயப்படி மற்றும் அரசியல் கணக்கீடுகள் அடிப்படையில், நம்மால் சுமார் 61 ஆயிரம் வாக்குகளைப் பெறமுடியும்" என்று ஸாஹிட் தெரிவித்தார்.
பேராக்கின், மஞ்சோங்கில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த அம்னோ லுமுட் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போது துணைப் பிரதமருமான ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தேமுவுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான கூட்டணி அவசியம் நிலைநாட்டப்பட வேண்டியதை,அண்மைய ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருப்பதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.“நமது பங்காளிக் கட்சிகளுக்குச் சொந்தமான தொகுதிகளையும் நாம் அவசியம் ஏற்றுக் கொண்டு ஆதரிக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணமாக ஆயர் கூனிங் சட்டமன்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

"இதற்கு முந்தைய தேர்தலில், லுமுட் மாவட்டத்தில் உள்ள சீனர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வாக்களிப்பு பகுதிகளில் நாம் முற்றாக தோல்வி அடைந்திருந்தோம்.ஆனால், அண்மைய இடைத் தேர்தலில், சீனர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஒரு பகுதியைத் தவிர்த்து இதர அனைத்திலும் நாம் வெற்றி பெற்றிருந்தோம்.

“இதில் நேர்மையோ விசுவாசமோ அடங்கி இருக்கவில்லை.மாறாக, அது அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் வியூகமாகும். நமது கூட்டணிகளுடன் நாம் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் தொடர்ந்து இருந்து வந்தால், அது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.நாம் தனித்து போட்டியிட்டிருக்கின்றோமா? ஆம், நாம் அப்படி போட்டியிட்டிருக்கின்றோம்.

ஆனால், இதர கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களின் ஆதரவுடன் தனித்துப் மது சொந்த சின்னத்தின் கீழ் நாம் போட்டியிட்டாலும், நமது பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்துதான் அவ்வாறு செய்திருக்கின்றோம்" என்று ஸாஹிட் தெரிவித்தார். இதனிடையே, வரும் பொதுத்
தேர்தலில் அம்னோ தனது "டாச்சிங்" சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் கூறிய ஸாஹிட், அவ்வாறு செய்வதன் மூலம் தனது "கூட்டாளிகளை" அது ஓரங்கட்டுவதாக அர்த்தமாகாது என்றார்.

"இதன் அர்த்தம் என்ன? மஇகா, மசீச மற்றும் பிபிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நமது நண்பர்களை ஓரங்கட்ட நாம் விரும்புகின்றோம் என்று இது அர்த்தமாகுமா? பக்காத்தான் ஹராப்பானில் உள்ள பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நமது நண்பர்களை நிராகரிக்க நாம் விரும்புகின்றோம் என்றும் இது அர்த்தமாகுமா?

“அம்னோ தனது நண்பர்களை எந்தச் சூழலிலும் கைவிட்டது. கிடையாது. புதிய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக, நமது நீண்ட கால பங்காளிகளையும் நாங்கள் கைவிட்டதில்லை" என்று ஸாஹிட் குறிப்பிட்டார்.

Zahid Hamidi menegaskan BN tidak akan bertanding secara bersendirian dalam PRU16, sebaliknya terus bekerjasama dengan PH dan rakan lama seperti MIC, MCA, dan PBRS. Kerjasama dianggap strategi penting untuk kemenangan dan kestabilan politik masa depan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *