சபா சட்டமன்றத் தேர்தலில் தேமுவுடன் பிபிஎஸ் ஒத்துழைக்காது!

top-news
FREE WEBSITE AD

கோத்தாகினபாலு, ஜூன் 27-

சபா மாநிலத்தின் 17ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து ஒத்துழைக்கப் போவதில்லை என்று, பார்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பதை கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர்நிராகரித்த பின்னர், கட்சியின் இந்த நிலைப்பாட்டை அதன் இடைக்காலத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜோசிம் குன்சலாம் நேற்று வியாழக்கிழமை வெளிப்படுத்தினார்.

ஆளும் கூட்டணியான காபுங்ஙான் ரக்யாட் சபாவுக்கு (ஜிஆர்எஸ்) பிபிஎஸ் தொடர்ந்து விசுவாசமாக இருந்து வருவதென்ற கட்சியின் நிலைப்பாட்டையும் வலியுறுத்திக் கூறிய அவர், “எங்களின் நிலைப்பாடு தெளிவானது. ஜிஆர்எஸ் கூட்டணியில் பிபிஎஸ் தொடர்ந்து ஒத்துழைத்து வரும்" என்றார்.

சபா மாநிலத்தின் ஐந்தாண்டு கால தவணை இவ்வாண்டு நவம்பர் 11ஆம் தேதியோடு நிறைவடைய விருக்கிறது. அதற்குள் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டுவிட வேண்டும்.

Parti Bersatu Sabah (PBS) menegaskan tidak akan bekerjasama dengan Barisan Nasional dalam PRN ke-17 Sabah. Ketua sementara, Datuk Seri Dr Joachim Gunsalam menyatakan PBS kekal setia bersama Gabungan Rakyat Sabah (GRS) menjelang tamat tempoh Dewan Undangan Negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *