நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டேன்! - நூருல் இஸா அன்வார்
- Shan Siva
- 13 Aug, 2025
கோத்த கினபாலு, ஆக 13: ஜாரா கைரினா மகாதீருக்கு நீதி கிடைக்கும் வரை
போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என்று பிரதமரின் மகள் நூருல் இஸ்ஸா அன்வர்
உறுதியளித்துள்ளார்.
இந்த வழக்கில்
ஒவ்வொரு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
விழிப்புடன்
இருப்பது, குழந்தைகளைப்
பாதுகாப்பது மற்றும் இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்
கொள்வது தங்கள் பொறுப்பு என்று அவர் இன்று
ஜாரா கைரினாவின் தாயாருடன் சந்தித்த பிறகு ஓர் அறிக்கையில் கூறினார்.
ஒரு தாயாக,
ஜாராவின் தாயார் தாங்கும் வலியை தாம்
உண்மையிலேயே உணர்வதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



