பேரா அரசாங்கத்தில் இந்திய சமூகத்திற்காக கடமை ஆற்றுகிறேன் - சிவநேசன்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, அக்.6-

பேரா மாநிலத்தில் தொண்டாற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு, மாநில ஜசெக தலைமையகம் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வினை 4.10.2025 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் முதலாம் மாடியில் நடத்தியுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி-வீடமைப்பு அமைச்சர் ஙா கோர் மிங், பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், பெருவாஸ் நாடாளுமன்ற 2. (Ngeh Koo Ham), புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் ஷா ஷா பவானி வீரையா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்பில் ஊராட்சி செயலவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

மாநில இந்தியர்கள் கடந்த 45 ஆண்டுகள் எதிர்கொண்டிருந்த வீட்டுமனை நிலப்பட்டா விவகாரத்தில், இந்த இரு ஆண்டுகளில் ஏறக்குறைய 500 இந்தியக் குடும்பங்களின் பிரச்சினைக்கு மாநில ஆட்சிக்குழு சார்பில் தீர்வுக் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் தைப்பிங், சித்தியவான், பீடோர், சுங்காய் மற்றும் தாப்பா தொகுதியில் உள்ளவர்கள் ஆவர்.

மாநில இந்திய சமூ கத்திற்கு (2025) 60 லட்சம் வெள்ளியும் 10 லட்சம் வெள்ளி இந்திய மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு வழங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொகையும் போதாது என்னும் நிலை வந்தால், மேலும் மானியம் தேவை என மாநில மந்திரி பெசாரிடம் கோரிக்கையாக வைப்பேன். நியாயமான எனது கோரிக்கை என்பது ஒட்டுமொத்த மாநில இந்திய சமூகத்திற்கு தான் என்பதை மந்திரி பெசார் நன்கு அறிந்துள்ளார்.

அதனால், கேட்பது நம் சமுதாயத்திற்கு. சென்றடைவதும் சமுதாயத்திற்கே என்பதில் சரியாக இருக்கிறேன். என் அலுவலகத்திற்கு உதவி என்று கேட்டுவரும் மஇகாவினராக இருந்தாலும் உதவியிருக்கிறேன் என்றார். அந்த வகையில் கடந்த 48 ஆண்டுகள் தாப்பா தொகுதியில் அரசாங்க நிலத்தில் குடியிருக்கும் 40 குடும்பங்களுக்கு வரும் 1110.2025 இல் நிரந்தர வீட்டுமனை நிலப்பட்டா அவர்களின் வசமாகிறது.

பீடோர் முஹிபா மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில், நிலப்பட்டா பெற்றுக்கொள்ளும் தாப்பா வாழ் இந்தியர்களுக்காக என்னோடு உறுதுணையாக இருந்துள்ள தாப்பா நில அலுவலக அதிகாரிகள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள்

தாப்பா தொகுதியில் மஇகா தலைவர்கள் நாடாளுமன்ற அரசியல் செயலாளராகவும், துணையமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் நிலப்பிரச்சினைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் தான் பதில் உள்ளது.

நம் சமூ கத்திற்கு,மாணவர்களுக்கு, ஆலயங்களுக்கும் தீர்க்கப்படாதவைகளுக்கு தீர்வை ஏற்படுத்தித் தருவதில், மாநில அளவில் வெற்றி பெறுகின்றோம். அதில் தாப்பாவை தள்ளிவைக்கவோ, ஓரங்கட்டவோ முடியாது. ஏனென்றால், அவர்களும் ஒற்றுமை அரசாங்கத்தில் நன்மை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்றும் சிவநேசன் பேசினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *