உலகின் முக்கிய முஸ்லிம் தலைவர்களை ஒருங்கிணைப்பேன்! - இஸ்ரேலுக்கு அன்வார் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 11: இஸ்ரேலின் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை கடுமையாக கண்டிக்க, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OIC மூலம் இஸ்லாமிய உலகத் தலைவர்களை ஈடுபடுத்த மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளிட்ட பல முக்கிய முஸ்லிம் தலைவர்களைத் தொடர்பு கொள்ள தனிப்பட்ட முறையில் முன்முயற்சி எடுக்கப்போவதாக அன்வார் கூறினார்.

 இஸ்ரேலின் நடத்தை கண்ணியத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 9வது சர்வதேச சமூக அறிவியல் மற்றும் மனிதநேய மாநாட்டை (ICOSH 2025) தலைமை தாங்கிய பின்னர் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தாரின் தோஹாவில் இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அன்வார் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *