இரு நாள்கள் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாடு!

- Muthu Kumar
- 16 Mar, 2025
சிரம்பான், மார்ச் 16-
46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மே 26 தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில். உரையாடல் பங்காளிகளுடனான ஆசியான் உச்சநிலை மாநாடு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.ஆசியான் உறுப்பிய நாடுகளின் அனைத்து 10 தலைவர்களையும் உள்ளடக்கிய இந்த உச்சநிலை மாநாடு மே 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு மன்றம். GCC தலைவர்களுடனான ஆசியான் நாடுகளின் தலைவர்களை உட்படுத்திய கூட்டம் மே 27ஆம்
தேதி நடைபெறவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆசியான் நாடுகளுடன், சீனா, தென் கொரியா, ஜப்பான். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள், ASEAN Plus Three, ASEAN Plus One, ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் ஆசியான் வட்டார கருத்தரங்கு ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளன.
நேற்று நெகிரி செம்பிலான், மம்பாவில் உணவுக் கூடைகள், உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
Sidang Kemuncak ASEAN ke-46 akan berlangsung pada 26-27 Mei, diikuti Sidang Kemuncak dengan rakan dialog pada akhir Oktober. Semua 10 pemimpin ASEAN akan hadir, termasuk mesyuarat dengan GCC. Negara seperti China, Jepun, dan AS turut serta dalam sidang Oktober.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *