மின்னழைப்பு ஓட்டுனர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர்!
- Muthu Kumar
- 25 Sep, 2024
தாவாவ், செப். 25-
மின்னழைப்பு ஓட்டுநர் ஒருவரைக் கொலை செய்ததாக அந்நபரின் முன்னாள் மனைவி நூரிமா ஜூலி (வயது 35), வளர்ப்புச் சகோதரன் ஆகியோர் மீது தாவாவ் உயர்நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி டத்தோ டங்கன் சிக்கோடோல் முன்னிலையில் சுமத்தப்பட்ட அக்குற்றத்தை அவர்கள் இருவரும் மறுத்தனர். நூர்மான் பகாரத்து (வயது 61) என்ற அந்த மின்னழைப்பு ஓட்டுநரை கடந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இரவில் செம்பனைத் தோட்டமொன்றில் கொலை செய்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தண்டனைச் சட்டம் 302ஆவது பிரிவின்கீழ் மரணதண்டனை அல்லது முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வரைக்குமான சிறைதண்டனையோடு குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் அவர்களுக்கு விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *