ஸ்ரீ கெம்பாங்கான் பெண் கொலை தொடர்பில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கிள்ளான், நவ 17: கடந்த மாதம் சிலாங்கூர்  ஸ்ரீ கெம்பாங்கான், ப்ளூ வாட்டர் எஸ்டேட் ரவுண்டானா அருகே உள்ள ஜாலான் ஆர்கிட் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் மரணம் தொடர்பாக இன்று உள்ளூரைச் சேர்ந்த இரு ஆடவர்கள் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 26 வயது கார்த்திக் மற்றும் 23 வயது ஹரிபிரசாந்த் ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 6.18 மணி முதல் 25 ஆம் தேதி அதிகாலை 2.17 மணிக்குள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத ஆனால் 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 12 பிரம்படியும் விதிக்கப்படும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *