மக்களின் வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைக் குறைக்க இரு அணுகுமுறைகள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 3-

ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தை அதிகரித்தல், வருமான அளவை உயர்த்துதல் ஆகிய இரு அணுகுமுறைகளின் வழி, மக்களின் வாழ்க்கைச் செலவினத்தில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை வலுப்படுத்தி வருகிறது.

நாட்டு மக்கள், குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ரஹ்மா மடானி வழங்குவதாக உள்நாட்டு வாணிய மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.

"உலகச் சந்தை விலைகளைக் கட்டுப்படுத்துவது நமக்குக் கடினம். உதாரணமாக, 100விழுக்காடு வெங்காயத்தை நாம் இறக்குமதி செய்யும்போது, அது உலக
சந்தை விலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், நாம் அதை எப்படிச் செய்வது? ரஹ்மா விற்பனையைச் செய்கிறோம்,

கழிவுகளை வழங்குகிறோம். செலவழிப்பு வருமானம் குறையும்போது, ரஹ்மா விற்பனை உதவியுடன் மக்களால் அதை வாங்க முடியும். நாங்கள் இங்கு உதவவில்லை என்றால், மக்கள் அதனை எவ்வாறு பயன்படுத்துவார்கள்?' என்றார் அவர்.

மக்களின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்வதன் வழி, வாழ்க்கைச் செலவினம் மீதான அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதில் அரசாங்கம் முறையான வழிமுறைகளை பின்பற்றுவதாக அவர் விவரித்தார்.

மக்களின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளதாகவும் அதில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது மற்றும் சில துறைகளில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை நிர்ணயிப்பது ஆகியவை அடங்கும் என்றும் டாக்டர் ஃபுசியா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *