பந்தாய் செனாங் கடலில் சிலாங்கூரைச் இருவர் மூழ்கி மரணம்!

top-news
FREE WEBSITE AD

லங்காவி, அக். 24-

கடல் நடவடிக்கைகளில் மகிழ்ச்சியுடன் இருந்த ஒரு சுற்றுப்பயணிகள் குழுவினரில் 2 பேர் மூழ்கி மரணமடைந்து விட்டனர்.கடந்த புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் ஆர்.நுரேந்திரன் (வயது 38) மற்றும் எம்.சுரேஷ் (வயது 46) ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர் என்று லங்காவி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் எஸ்பி சம்சுல்முடின் சுலைமான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.05 மணிக்கு எங்களுக்கு அவசர அழைப்பு பெறப்பட்டது.
இவர்கள் 2 பேரும் ஜெட் ஸ்கை பயன்படுத்திப் பொதுமக்களால் காப்பபாற்றிக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சுல்தானா மலிஹா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.இருந்த போதிலும் அவசர வார்ட்டில் மருத்துவ அதிகாரி சோதனையிட்டதில் இருவரும் உயிரிழந்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடக்கக்கட்ட விசாரணைப்படி தங்களின் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க வந்த 2 பேரும் சம்பவத்திற்கு முன்பாக அக்கடற்கரையில் குளித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.இது ஒரு திடீர் மரணச் சம்பவமாக வகைப்படுத்தப்படுவதாக ஓர் அறிக்கையில் எஸ்பி சம்சுல்முடின் சுலைமான் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *