கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சோதனையின்றி நுழைய அனுமதித்த இரு மூத்த அதிகாரிகள் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டு மூத்த குடிநுழைவு அதிகாரிகள், நாட்டின் நுழைவு வாயிலில் சோதனைகள் இல்லாமல் வெளிநாட்டினரை உள்ளே நுழைய சுமார் 4 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலாய், ஜொகூர் பாருவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 40 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேஎல்ஐஏ முனையம் 1. கேஎல்ஐஏ 2 இல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்துள்ளன.

2022 முதல் 2024 வரை முறையான சோதனைகள் இல்லாமல் வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க அந்த கும்பல் லட்சக்கணக்கான ரிங்கிட் லஞ்சமாக வசூலித்ததாக நம்பப்படுகிறது.எம்ஏசிசி ஒரு தொகையையும் பறிமுதல் செய்து சந்தேக நபர்களுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்கியது.

கேஎல்ஐஏ1, கேஎல்ஐஏ2 இல் தனித்தனியாகப்
பணியாற்றிய சந்தேக நபர்கள், விசாரணைக்கு உதவ ஆகஸ்ட் 26 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பகாங் எம்ஏசிசி இயக்குநர் ஷுகோர் மஹ்மூத் இந்த கைதுகளை உறுதிப்படுத்தினார். கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களை அவர்கள் அடையாளம் கண்டு வருவதாகவும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *