கிள்ளான் கம்போங் ஜாவா நிலப்பிரச்சினைக்கு கால நீட்டிப்பு!

top-news
FREE WEBSITE AD

 கிள்ளான், நவ 10: கிள்ளான் கம்போங் ஜாவா பத்து அம்பாட் லோட் ; 11113 இல் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நில உரிமையாளர்களை கிள்ளான் மாவட்ட நில நிர்வாகமும், சிலாங்கூர் மாநில அரசும் வலுக்கட்டாயமாக வெளியேற நெருக்கடி கொடுத்து வருவதாகவும். இன்று 10.11. 2025 ஆம் தேதி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். எனவே உடனடியாக வெளியேறுவது என்பது சிரமம் என்பதால் கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று நேற்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் கவனத்திற்கும் தங்களின் இக்கட்டான சூழலை சம்பந்தப்பட்ட தரப்பினர் கொண்டு சென்றனர். வெளியேற்ற நடவடிக்கையை தள்ளிப்போடும்படி அவர்கள் ஓம்ஸ் பா.தியாகராஜனிடம் முறையிட்டனர்.

இதனை அடுத்து சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோரின் கவனத்திற்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் கொண்டு சென்றதை அடுத்து, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இன்று அங்குள்ள மக்கள் வெளியேற்றப்படவிருந்த நிலையில், நிலத்தைவிட்டு வெளியேற இம்மாதம் கடைசிவரை கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆவண செய்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மற்றும் ஓம்ஸ் தியாகராஜன் ஆகியோருக்கு கம்போங் ஜாவா, பத்து அம்பாட் நில உரிமையாளர்கள் சார்பில்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *