இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் விளக்கம்
- Shan Siva
- 21 May, 2026
கோலாலம்பூர், மே 21: ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பண்டான் மற்றும் சித்தியவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தாது என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருன், மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல், அந்த இடங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று ஆணையத்திடம் தெரிவித்ததாகக் கூறினார்.
ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் PKR கட்சியிலிருந்து விலகுவதற்கு முன்பே, முறையே பண்டான் மற்றும் சித்தியவங்சா தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் மலேசிய பெர்சாமா கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் தானாகவே கலைக்கப்படுவதால், இடைத்தேர்தல் நடத்துவது கட்டாயமில்லை.
இருப்பினும், மக்களவைத் தலைவர், இந்த காலியிடங்களால் ஆளும் கட்சியின் பெரும்பான்மை பாதிக்கப்படுவதாக ஆணையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தால், இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



