SPM தேர்வில் யாழினி 11A+ பெற்று சாதனை!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 4,

கிள்ளான் மெதடிஸ்ட் பெண்கள் இடைநிலைப்பள்ளி மாணவியான யாழினி குமரேசன் SPM தேர்வில் 11A+ பெற்று சாதனைப்படைத்தார். கிள்ளான் மேரு சாலை தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற யாழினி குமரேசன் SPM தேர்வில் அறிவியல் துறையில் தமிழ்மொழி தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு பாடமாக எடுத்து அனைத்து பாடங்களிலும் A+ எனும் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

மருத்துவராகும் கனவுடன் இருக்கும் யாழினி குமரேசன் மேலும் தன்னுடைய உயர்கல்வியைச் சிறப்பாகத் தொடர வேண்டும் என இடைநிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும்  யாழினியின் பெற்றோர்களான ஆசிரியர் திரு.குமரேசன் ஆசிரியைத் திருமதி.திலகலெட்சுமி வாழ்த்து தெரிவித்தனர். மெத்தடிஸ்ட் பெண்கள் இடைநிலைப்பள்ளியில் இவ்வாண்டு 16 மாணவிகள் அனைத்து பாடங்களிலும் A பெற்று சாதனை படைத்துள்ளதாகப் பள்ளி முதல்வர் திருமதி சங்கீத் கவுர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *