அதிக அளவில் மானிய விலை பெட்ரோல் நிரப்பியவரின் மை கார்ட் முடக்கம்!
- Shan Siva
- 24 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 24: மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பிய கார் உரிமையாளரின் MyKad கணக்கை முடக்கியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பரவிய காணொளியில், ஒரு தம்பதியினர் சுமார் RM230 மதிப்புள்ள RON95 எரிபொருளை நிரப்புவது காணப்பட்டது. இது ஜொகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோனாஸ் நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தம்பதியினர் கேன்களில் பெட்ரோலை நிரப்பியதுடன், பின்னர் காரிலும் நிரப்பியுள்ளனர்.
இது மானிய விலை பெட்ரோல் முறைகேடு என்பதால் இதுசட்டவிரோதமானது என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
எந்த விதமான மானியக் கசிவு அல்லது முறைகேட்டிலும் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளாது என்று அமைச்சு கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



