சைபர் ஜெயா மாணவி கொலை - உடன் இருந்த தோழியும் உடந்தை!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம்: சைபர்ஜெயாவில் 20 வயது மணிஷாபிரீத் கவுர் அகாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சமந்தப்பட்ட பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் வீட்டுத் தோழர் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

கொலைக்கு முன்பு வீட்டுத் தோழர் 20 வயது முக்கிய சந்தேக நபரான அவரது காதலரிடம் அணுகல் அட்டை மற்றும் விடுதிப் பிரிவின் சாவியைக் கொடுத்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர்  தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இரவில், காதலி தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றிருந்த நிலையில், சந்தேக நபர் மீண்டும் அங்கு தங்க விரும்பியதால் அணுகல் அட்டை மற்றும் சாவிகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண் மீது அவருக்கு தீய எண்ணம் இருந்தது, அதனால்தான் அவர்  அப்பெண்ணைத் தாக்கி இறுதியில் கொலை செய்தார் என்று அவர்  இன்று சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நோயியல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்களைக் கண்டறிய தாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
Kes pembunuhan Manishapreet Kaur, 20, di Cyberjaya melibatkan rakan serumahnya yang memberikan akses kepada teman lelakinya. Suspek dipercayai menyerang dan membunuh mangsa. Laporan perubatan tidak menunjukkan bukti rogol, namun siasatan lanjut diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *