எதிர்க்கட்சியின் திட்டத்தை நிராகரித்த ஆயர் கூனிங் வாக்காளர்கள்- சிவநேசன்!
- Muthu Kumar
- 28 Apr, 2025
(டிகே,மூர்த்தி)
பீடோர், ஏப். 28-
பேரா ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலின்போது பெரிக்காத்தான் கூட்டணி சேர்ந்த பாஸ் கட்சியினர் பன்றிப் பண்ணைகள் குறித்து இனவாதம்,மதவாதம் பிரச்சாரமே மிக மிக அதிகமாக ஒரு சமூகத்தின் மத்தியில் பேசினர் என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் கூறினார்.
அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. தேசிய முன்னணி அம்னோ வேட்பாளர் யூஸ்ரிக்கு இந்தப் பெரும்பான்மை வெற்றியைத் தொகுதி வாக்காளர் அளித்துள்ளனர்.பேரா மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை நன்கு அறிந்துள்ளனர். குறிப்பாக தஞ்சோங் மாலிம் புரோட்டான் கார் தயாரிப்பு துறைக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகள் என்பது உண்மயான செய்தியாகும்.
மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமது தேர்தலுக்காக சொன்ன வார்த்தைக் கிடையாது. நேர்மறையான அறிவிப்பு என்பதில் மாற்றமில்லை.அதே வேளையில், பாஸ் கட்சியினர் பன்றிப் பண்ணைகள் மற்றும் பீடோர் ஆற்றில் பன்றிக் கழிவுகள் என்றும் நேருக்கு மாறாக பொய்யான பிரச்சாரத்தை மக்கள் தூக்கி வீசியுள்ளதாகக் தெரிவித்தார்.
இந்த நாட்டில் 125 ஆண்டுகளாக பன்றிப் பண்ணைகள் மூலம் பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.இது 19 ஆம் நூற்றாண்டு முதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சட்டமன்ற கூட்டத்திலும், ஆயர் கூனிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது விலாவாரியாக தாம்
விளக்கம் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில், கடந்த காலத்தில் 32 மாதங்கள் பெரிக்காத்தான் கூட்டணி பேராவை ஆட்சி செய்தபோது, பாஸ் விவசாய துறை ஆட்சிக்குழுவில் இருந்துள்ள நிலையில், பன்றிப் பண்ணைகள் தொடர்பில் என்ன செய்தார்கள்.பன்றிப் பண்ணைகள் பக்கம் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கின்றேன்.
இந்த இடைத் தேர்தல் (பக்காத்தான் ஹரப்பானுக்கும் தேசிய முன்னணி) பேரா ஒற்றுமை அரசுக்கு மிக மிக முக்கியமான தேர்தல். சட்டமன்றத்தில் 6 சீட்டுகள் பெரும்பான்மையில் இருக்கின்றோம்.
இந்நிலையில், முன்னாளில் இந்த தொகுதி நாம் வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதியாகும்.
ஒரு வேளை எதிர்பாராத நிலையில்
தோல்வி கண்டிருந்தால், மக்களுக்கு ஒற்றுமை அரசின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது என்றும், மக்கள் வேறுபக்கம் திசை மாற்றியுள்ளனர் என்றும் பிரச்சாரத்தை நடத்தியிருப்பார்கள் என்றும் சிவநேசன் கருத்துரைத்தார்.
Sivanesan Achulingam menyatakan semasa pilihan raya kecil Ayar Kuning, PAS menggunakan isu ladang khinzir untuk propaganda perkauman dan agama. Namun, pengundi tetap memilih calon BN. Beliau menegaskan peluang kerja di Perak bertambah, dan menolak dakwaan negatif PAS terhadap pentadbiran negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



