உலு சிலாங்கூரில் நீர்வீழ்ச்சியில் குளித்த இளைஞர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

உலு சிலாங்கூர், ஜூலை 29: கம்போங் Kampung Pertakகில் உள்ள சுங்கை பெர்தாக் நீர்வீழ்ச்சியில் இன்று காலை நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

இது தொடர்பாக காலை 10.27 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

 இதனை அடுத்து கோலா குபு பாரு மற்றும் புக்கிட் செந்தோசா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு இயந்திரங்களுடன் 12 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

காலை 11.19 மணிக்கு ஐந்து மீட்டர் ஆழத்தில் பாதிக்கப்பட்டவரின் உடல் காணப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

பின்னர் உடல் சுகாதார அமைச்சக ஊழியர்களிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *