தைவானை நோக்கி நகர்ந்துவரும் 'ஃபங்- வோங்' புயல்!

top-news
FREE WEBSITE AD

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸை தாக்கிய ஃபங்-வோங் புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.230 கிமீ வேகத்தில் மிகப்பெரிய சூறாவளியாக சுழன்றடித்த ஃபங்-வோங் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்தசூழலில் பிலிப்பைன்ஸை கடந்திருக்கும் ஃபங்-வோங் புயல் வலுவிழந்தநிலையில், தற்போது தைவானை நோக்கி நகர்ந்துவருகிறது.. இந்தசூழலில் பாதுகாப்பு காரணமாக 8000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஃபங்-வோங் (Fung wong) புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தைவானின் கரையோரப் பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

வலிமை குறைந்து, தைவானை நோக்கி புயல் நகர்ந்துவரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, யிழனின் (YILAN) மாகாணத்தில் கனமழையால் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி உள்ளது. மழையால்பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *