பாடலாசிரியர் சினேகன் மருத்துவமனையில் அனுமதி!
- Muthu Kumar
- 22 Nov, 2025
திரைப்படத்துறையில் தனித்துவமான கவிதை வரிகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு கடந்த மாதம் உயிரிழந்தார். 101 வயது வரை நிறைவான வாழ்க்கை நடத்திய அவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். மேலும், சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
தந்தையின் இறப்பால் துவண்டு இருந்த சினேகன், தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இந்துள்ளார்.மேலும், பல புதிய படங்களுக்கான பாடல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இப்படியான நேரத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு விரைவில் நலம் கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஏராளமானோர் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



