சுயநலத்திற்காக மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க கூடாது!

top-news

ஜூன் 14,


மலாய்க்காரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மலாய் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் சுயநலத்திற்காக மலாய்க்காரர்களை ஒருங்கிணைக்க வேண்டாம் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறி அரசியல் செய்பவர்களை நம்பி மலாய்க்காரர்கள் ஏமாற வேண்டாம் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கேட்டுக் கொண்டார்.

மலாய்க்காரர்களின் உரிமைகள் நிலைக்க வேண்டுமா என்றுக் கேட்டால் உண்மையில் ஆமாம் என்பேன். ஆனால் மலாய்க்காரர்கள் ஏமாற்றப்படவில்லை. ஆட்சியில் யார் இருந்தாலும் சரி. அவர்களால் மலாய்க்காரர்களை ஒதுக்க முடியாது. மலாய்க்காரர்களைத் தவிர்க்க முடியாது என்பதை Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நினைவூட்டினார். மலாய் அமைப்புகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியது தான் இந்த அம்னோ எனும் வரலாற்றை மறந்த ஒருவர், கடந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்றத்தில் கூட டெபாசிட் பெறாத ஒருவர், மலாய்க்காரர்களின் மேம்பாட்டுக்காக எல்லோரையும் ஒன்றிணைக்க போவதாகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் நோக்கம் மலாய்க்காரர்களின் வளமாக வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டிருந்தால் உண்மையில் அவர் அம்னோவை அழிக்க நினைக்கமாட்டார். வரலாறே சாட்சி என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மறைமுகமாக மகாதீரின் பெயரைக் கூறாமல் தாக்கி பேசினார்.


Timbalan Perdana Menteri, Ahmad Zahid Hamidi mengingatkan supaya usaha menyatukan orang Melayu tidak disalahgunakan demi kepentingan peribadi. Beliau menegaskan orang Melayu tidak pernah dipinggirkan dan menempelak pihak tertentu yang cuba memecahbelahkan perpaduan Melayu demi agenda politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *