ஆட்சியிலிருந்து வெளியேறிய பாரிசான்! அன்வாரைச் சந்திக்கும் Zahid Hamidi!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 27,

பக்கத்தான் கூட்டணியும் பாரிசான் கூட்டணியும் இணைந்து போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பிரதமரும் பக்கத்தான் தலைவரும் பிரதமருமான DATUK SRI ANWAR IBRAHIM - ஐ சந்திக்கவிருப்பதாகப் பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான DATUK SRI Ahmad Zahid Hamidi தெரிவித்தார். நெகிரி செம்பிளானில் ஒற்றுமை கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை பாரிசானின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொண்டதால் PKR தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசு கவிழ்ந்தது.

இப்படி இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் முக்கிய பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்ய இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாதிக்கப்பட கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் DATUK SRI Ahmad Zahid Hamidi தெரிவித்தார். நானும் அன்வாரை சந்திக்க வேண்டும், அவரும் என்னைச் சந்திக்க வேண்டும்  என DATUK SRI Ahmad Zahid Hamidi தெரிவித்தார். இதற்கிடையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆதரவை மீட்டுக்கொண்ட 14 பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்றும் DATUK SRI Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *