நான் அன்வாரை நம்புகிறேன்! அன்வார் என்னை நம்புகிறார்! – ZAHID விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 17,

ஒற்றுமை கூட்டணியிலிருக்கும் பக்காத்தானும் பாரிசானும் நிலையான உறவுடன் இருப்பதாகத் துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான AHMAD ZAHID HAMIDI தெரிவித்தார். பாரிசான் உறுப்புக் கட்சிகளின் நிலையான ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் என்பதையும் சாஹிட் வலியுறுத்தினார். 2022 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் பாரிசானுக்கிடையிலான ஒப்பந்தம் சீர்குலையும் அளவிற்குப் பக்காத்தான் தலைமையும் பாரிசான் தலைமையும் செயல்படாது. அது இரு கட்சிகளின் தலைமைத்துவமும் உறுதிச் செய்து வருவதாக சாஹிட் ஹமிடி நம்பிக்கை அளித்தார். 

நான் அன்வாரை நம்புகிறேன், அன்வார் என்னை நம்புகிறார். 2018 அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் பாரிசான் பல்வேறும் துரோகங்களை எதிர்கொண்டாலும் மீண்டும் அம்மாதிரியானத் துரோகத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். பக்காத்தான் உறுப்புக் கட்சிகளிடையிலான முரண்களும் பாரிசான் உறுப்புக் கட்சிகளுக்கிடையிலான முரண்களும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சியைப் பாதிக்காது என்பதைப் பக்காத்தான் தலைவர் அன்வாரும், பாரிசான் தலைவரான தாமும் உறுதியாக இருக்கிறோம் என சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *