மக்களிடமிருந்து விலகி இருக்காதீர்! அமைச்சர்களுக்கு ZAHID HAMIDI வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 5,

மக்களுடன் விலகியிருக்கும் மனப்பான்மையைத் தவிர்க்கும்படி அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் துணைப்பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கேட்டுக்கொண்டார். தேர்தல் காலங்களில் மக்களுடன் மக்களாக நிற்கும் அரசியல்வாதிகள் அமைச்ச்சர் துணை அமைச்சரானதும் மக்கள் இலகுவாக அணுக முடியாத தூரத்தில் இருப்பதாக Datuk Seri Dr Ahmad Zahid Hamidi சுட்டிக்காட்டினார். முக்கியமாகச் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இல்லாத அரசியல்வாதிகள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமூகவலைத்தலமோ தனிப்பட்ட முகநூல் பக்கமோ கூட இல்லை என்பதை Datuk Seri Dr Ahmad Zahid Hamidi சுட்டிக்காட்டினார். ஒரு சில அரசியல் தலைவர்கள் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பதிவிட்ட இடுகைகளே இறுதியாக இருக்கிறது என்றும் தொலைப்பேசி எண்கள் கூட இல்லாமல் சமூகவலைத்தலங்களில் பதிவு செய்து வருவதாகவும் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். இது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. மக்களின் குறையை நிவர்த்தி செய்யும் பொறுப்பு நமக்கு உண்டு. ஆனால் மக்களின் குறையை எப்படி தெரிந்துக் கொள்வதற்கு அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

அமைச்சர் துணை அமைச்சர்கள் புத்ராஜெயாவில் இருந்தாலும் உங்களின் நாடாளுமன்றத்தின் மக்கள் சேவை மையங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அரசியல் செயலாளர்கள் மூலமாகச் சமூகவலைத்தலங்களில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் துணைப்பிரதமர் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *