நான் தவறு செய்துவிட்டேன்! என்னை மன்னியுங்கள்! – ZAHID HAMIDI உருக்கம்!
- Sangeetha K Loganathan
- 09 Jul, 2025
ஜூலை 9,
ஒரு கட்சியின் தலைவராக நான் எதிர்கொண்ட சோதனைகளை விவரிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில தவறான உவமைகளைப் பயன்படுத்திவிட்டதற்கு அல்லாவிடமும் மக்களிடமும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட் கிழமை ஜொகூரில் நடந்த அம்னோ உறுப்பினர்களுடனான ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியில் Datuk Seri Ahmad Zahid Hamidi பேசிய போது “அம்னோவை வழிநடத்தும் பொறுப்பு தேவதைகளின் கட்டளை” என தவறான உவமையைப் பயன்படுத்தியது இஸ்லாமியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் மேடைகளில் அல்லாவின் குறியீட்டையோ, அதன் புனிதத்தைக் குறிக்கும் வகையிலோ தெரிவித்தது என்னுடைய தவறு என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
தாம் தெரிவித்தது தவறான உவமை என்றும் உவமைகளைப் பயன்படுத்தும் போது அல்லா தொடர்புடைய கருத்துகளைத் தெரிவித்திருக்க கூடாது என்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகவும் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். கட்சியின் தலைவராக நான் எதிர்கொண்ட சோதனைகளை விவரிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு இது போன்ற தவறான ஒப்பீடுகளை என்னை அறியாமல் பேசியதற்கு அனைவரும் மன்னிக்கும்படி துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Timbalan Perdana Menteri merangkap Presiden UMNO, Datuk Seri Ahmad Zahid Hamidi memohon maaf secara terbuka kepada Allah dan rakyat atas ucapannya yang menggunakan perumpamaan kurang tepat semasa berucap di Johor. Beliau akui silapnya berlaku tanpa sengaja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



