Zahid மன்னிப்பு கேட்டால் அம்னோவில் இணைகிறேன்! Isham Jalil உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 07 Mar, 2026
மார்ச் 7,
அம்னோவிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் சேர்ந்து கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Zahid Hamidi தெரிவித்தாலும் Zahid மன்னிப்புக் கேட்டால் மட்டுமே தான் மீண்டும் அம்னோவில் இணைவேன் என அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் Isham Jalil தெரிவித்தார். அம்னோவிலிருந்து விலகியவர்களை விடவும் Zahid Hamidi ஆல் வெளியேற்றப்பட்டவர்களே அதிகம் என 2023இல் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட Isham Jalil தெரிவித்தார்.
கடந்த தேர்தல் முடிந்ததும் என்னைப் போன்ற விசுவாசிகள் அம்னோவிலிருந்து வெளியேற்றிய Zahid இப்போது மீண்டும் அழைக்கிறார் என்றால் Zahid க்கு வேறு உள்நோக்கம் உள்ளது என Isham Jalil தெரிவித்தார். அஹ்மத் ஜாஹிட் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், நீக்கப்பட்ட மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் நேரில் மன்னிப்பு கேட்பதன் மூலம் தனது ஈகோவைக் குறைக்குமாறு Isham Jalil அறிவுறுத்தினார். அம்னோ எப்போது டி.ஏ.பி-உடன் இணைந்ததோ அப்போதே அதன் தனித்துவத்தையும் மகத்துவத்தையும் அம்னோ இழந்து விட்டது என Isham Jalil சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



