மடானி அரசின் ஆதரவு குழு (BBC) புதிய தலைவர் – டாக்டர் சாலிஹா முஸ்தபா நியமனம்
- Tamil Malar (Reporter)
- 22 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 22-
செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா, மடானி அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய (Backbenchers Club – BBC) குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்தப் பொறுப்பை வகித்து வந்த பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஷஹார் அப்துல்லா, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற மடானி அரசின் அமைச்சரவை மறுசீரமைப்பில் பொருளாதாரத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னணியில் இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறிவிப்பை இன்று நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் டத்தோ ரம்லி முகமட் நோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவர் , “மாண்புமிகு செகிஜாங் உறுப்பினர் டாக்டர் சாலிஹா முஸ்தபா, BBC குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
BBC குழு, அரசின் கொள்கைகள், சட்ட முன்மொழிவுகளை ஆதரிப்பதோடு, அடிப்படை உறுப்பினர்களின் கருத்துகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பாலமாக செயல்படுகிறது. டாக்டர் சாலிஹாவின் அனுபவமும் தலைமையும், மடானி அரசின் சீர்திருத்த முயற்சிகளுக்கு வலுவூட்டும் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



