அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக 27 அதிகாரிகள் மீது நடவடிக்கை! – அமைச்சர் ZALIHA MUSTAFA!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 12,

அரசுத் திட்டங்கள் குறித்து எதிரான கருத்துகளைப் பரப்பிய அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பிரதமர் துறையின் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr. Zaliha Mustafa இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஆண்டு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட 27 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதையும் Datuk Seri Dr. Zaliha Mustafa சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறும் எந்தவோர் அரசு அதிகாரிகள் மீதும் நியாயமான விசாரணையை அரசு மேற்கொள்ளும் என்றும் விசாரணையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் Datuk Seri Dr. Zaliha Mustafa தெரிவித்தார். அரசு அதிகாரிகள் பணியிட மாற்றங்கள், இடைநீக்கம், முழுமையாகப் பணியிலிருந்து நீக்கம், ஊக்கத் தொகை கட்டுப்பாடு என முக்கிய தண்டனைகளை 27 அரசு அதிகாரிகள் எதிர்நோக்கி வருவதாகவும் Datuk Seri Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *