சேதமடைந்த தீபாவளி கூடாரங்கள்! 118 புதிய கூடாரங்களை வழங்கிய அமைச்சர்!
- Thinagaren Sanggaren
- 03 Oct, 2025
அக்தோபர் 3,
பிரிக்ஃபீல்ட்ஸில் தீபாவளியை முன்னிட்டு போடப்பட்ட வணிகக் கூடாரங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் சேதமடைந்த கூடாரங்களுக்குப் பதிலாகப் புதிய கூடாரங்களை வழங்குவதாகக் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa இன்று தெரிவித்தார். கனமழையால் சேதமடைந்திருக்கும் கூட்டாரங்களின் அளவை விடவும் அளவில் பெரிய கூடாரங்களை வழங்குவதாகவும் வார்த்தகர்களுக்குக் கூடாரங்கள் வழங்குவதில் எந்தவொரு குழப்பமும் ஏற்படாது என்றும் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
முன்னதாக 134 வணிகர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸில் தற்காலிக வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதில் வணிகர்களுக்கு ஏற்பட்டு அதிருப்தியைச் சுமூகமாகப் பேசி நிவர்த்தி செய்திருப்பதாகவும் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். தற்போது பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள 5 முதன்மை சாலைகளில் 134 வணிகக் கடைகள் தீபாவளியை முன்னிட்டு செயல்படும் என Datuk Seri Dr Zaliha Mustafa நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் JALAN BUNUS 6 சாலையில் 24 கூடாரங்களும் துன் சம்பந்தன் சாலையில் 36 கூடாரங்களும் துன் சம்பந்தன் சாலை முகப்பில் 16 கூடாரங்களும் ஜாலான் ரக்யாட் சாலையில் 14 கூடாரங்களும் LITTLE INDIA முதன்மை சாலையில் 44 கூடாரங்களும் அமைக்கப்படும் என கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



