போப் இறுதிச் சடங்கில் அஸாலினா & டத்தோ எவோன் பெனடிக் பங்கேற்கிறார்கள்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப்ரல் 25: நாளை வாடிகன் நகரில் நடைபெறவிருக்கும் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் சைட் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் ஆகியோர் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சு இதனை இன்று உறுதிப்படுத்தியது.

அரசு இறுதிச் சடங்கில், வாடிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், நடைபெறும் புனித திருப்பலிக்குப் பிறகு, ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவிற்கு புனிதரின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அங்கு புனித போப்பின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்படும்! 

Menteri Undang-undang dan Menteri Pembangunan Usahawan wakili Malaysia di upacara penghormatan akhir mendiang Paus Fransiskus di Vatican. Upacara dijangka berlangsung di St. Peter’s Square dan jenazah akan dikebumikan di Basilika Santa Maria Maggiore, Rom.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *